சோழ மாமன்னனின் விண்முட்டும் தஞ்சைப் பெருவுடையார் பெருங் கோயில் !

Friday, August 6, 2010

தமிழ்க் கடலோடிகளின் கடல் மேலாண்மை ! சோழப் பெருவேந்தன் : கடாரம் கொண்டானா ? நேரில் ஒரு கள ஆய்வு !

`


                                  பழந் தமிழ்க் கடலோடிகளின் கடல் வழி !

அகநானூறு கூறும் மாகடல் மேலாண்மை  :

 பாலைத்திணையில் மருதன் இளநாகனார் உரைப்பது -
"உலகு கிளர்ந்தன்ன உருகெழுவங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ......"

வங்கம் என்றால் கப்பல்.........
(ஆயின் வங்கக்கடல் என்பது தமிழ் வேர்ச்சொல்லே என  ஓர்க.)
 " உலகமே கிளர்ந்து எழுந்தாற்போல அச்சத்தை ஏற்படுத்தும் கப்பல் பெரிய கடல் நீர்ப் பரப்பைக் கிழித்துச் சென்றது ......." என்று பொருள் படும்.

இந்த சங்க இலக்கிய அகச் சான்றைத் தவிர்த்த அயலகச் சான்றுகளையும், தென் தமிழகத்திலே இன்றைக்கும் வாழும் மரக்கலம் தொடர்பான இரு இனங்களைப் பற்றியும் பிற அகச் சான்றுகளையும் காண்போம்.

தென் தமிழகத்தில் இன்றும் வாழும் ஓடாவியர் என்ற பிரிவினர் பெரும் மரக்கலங்கள் கட்டியவர்கள். வா(மா)திரியார்கள் என்பவர்கள் காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும் ,பருத்தி ஆடைகளை செய்துவருபவர்கள்.
https://ta.wikipedia.org/s/8fx

கடாரம் கொண்டான் :
சோழ மாமன்னன் இராசராசன் ஆணையின்படி பட்டத்து இளவரசன்  இராசேந்திர சோழன் கடல் கடந்து மிகப் பெருங் கடற்படையுடன் கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளைப் படையெடுத்துத் தோற்கடித்து போரில்  திரு விசயப் பேரரசையும்  வென்று , "கடாரம் கொண்டான்" என்ற  சிறப்புப் பெயரையும் சோழமாமன்னனுக்கு காணிக்கையாக்கினான்.

கடாரம் நோக்கிய எங்கள் பயணம் :
 அந்த கடாரத்தை நேரில் போய்ப் பார்த்தால் என்ன என்று நானும் பேராசிரியர் இறையரசனும் கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரை நாங்கள் அடைந்தோம் !


கோலாலம்பூரிலிருந்து 150 கி.மி தொலைவு கூலிம் நகரம் உள்ளது. . கூலிம் என்பது ஒரு மரத்தின் பெயர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து  5 - மணி நேரப் பயணம். 33.50 மலேய வெள்ளிகள் ஒரு பயணசீட்டு. மாலை 4.30 க்குப் புறப்பட்டு இரவு 9.00 - க்கு கூலிம் போய்ச் சேர்ந்தோம்.

கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட சோழப் பெருவேந்தன் இராஜ இராஜன் ஆட்சிக் காலத்தே அவன் மகன் இராஜேந்திர சோழன் தாய்லாந்து, கம்போடியா (காம்போஜம்), வியத்நாம், கடாரம், (கெடா, மலேசியா) சாவகம், (ஜாவா, இந்தோனேசியா) போன்ற நாடுகளுக்குச் சென்று, வென்று கோயில்களை அமைத்தான் ! என்ற வரலாறு நம் பள்ளிக் கூட நாட்களில் நமக்குச் சொல்லப்பட்டது !

ஆனால் ஒரு புதிய வரலாற்று உண்மை எங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலனார் அவர்களால் எங்களுக்குப் புலப்பட்டது.

தென்கிழக்காசிய நாட்டு மக்கள் பண்பாடும் தமிழரும் :
தமிழ் நாட்டு பண்பாட்டின் முழுமை தென்கிழக்காசிய நாட்டு மக்கள் பண்பாட்டினை ஆராயாமல் முழுமை அடையாது என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அப் பண்பாட்டின் அரைப்பகுதியை மட்டும் அறிந்த செயலாகும் என சிறப்பு நிலைப் பேராசிரியர் சிங்கரவேலனார் ஆதரங்களுடன் விளக்கினார்.


                                           சிறப்பு நிலைப் பேராசிரியர் சிங்கரவேலனார்

தமிழ்க் கடலோடிகள் புதிய கற்காலந்தொட்டே அடிக்கடி வந்து போன இடங்களே தென் கிழக்காசிய நாடுகள் என அகழ்வதாரங்கள், தொல்லியல் ஆய்வுசான்றுகள் கூறுவதாக அடித்துச் சொல்கிறார். 


 கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சீனத்துடன் தமிழ்க் கடலோடிகள் வணிகம்:

தமிழ் நாட்டின் புதுச்சேரிக்கருகில் உள்ள அரிக்காமேடு (அருகன் மேடு) என்ற இடத்திலிருந்து  சீனத்துடன் தமிழ்க் கடலோடிகள் வணிகம் செய்து சீனத்துப் பொருட்களை வாங்கி ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்தனர் என்று சீன வணிகக் குறிப்பு பதிவு செய்கிறது.

தமிழ்க் கடலோடிகளின் கடல் மேலாண்மை :(கி.மு 3 -ஆம் நூற்றாண்டு - கி.பி 12 - ஆம் நூற்றாண்டு வரை ) 

முதன் முதலில் ஏறத்தாழ ஆயிரம்  ஆண்டுகட்குமேல் தமிழ் வணிகர்கள் மட்டுமே மரக்கலங்களில் கடலில் நெடும் பயணம் செய்து சீனத்துடன் வணிகம் செய்தார்கள். சீனத்துப் பொருட்களை ரோமாபுரிக்கும் ஏற்றுமதி செய்து கடல் வணிகத்தைத் தன முழுக் கட்டுப்பாட்டில் வைத்தனர்.அதுவரை தமிழ்க் கடலோடிகளின் கொடி உச்சியில் பறந்தது.

கி.பி. 13 -  நூற்றாண்டில்தான் சீனர்கள் கடல் வணிகத்தில் நுழைந்தார்கள் என்று சீனத்துப் பதிவு அடித்துக் கூறுகிறது.

ஆக  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்க் கொடி மாகடல் வணிகத்  தில் உச்சியில் பறந்தது . 


Quote: “Chinese vessels, which were previously unknown in the Indian Ocean, also

entered the shipping and commercial lanes between China and southern

Asia in the thirteenth century. - Intorducion - Unquote
   
காண்க : உறலி



காண்க: உறலி :




பழந்தமிழரின் பெருங் கப்பல்கள் :

பெரிப்பிளசு பயணக் குறிப்புகளிலும், பிளைனி, டாலமி , போன்ற கிரேக்க , ரோமப் பேரரசுகளின் நிலவியலாளர்கள், அரபுக் குறிப்புகளிலும்  பெருங் கப்பல்களில் தமிழ்க் கடலோடிகள் வணிகஞ் செய்தார்கள்; சீனத்துப் பொருட்களையும், மிளகு ,ஏலம், கிராம்பு, மயிற்பீலி, தேக்கு, போன்ற பொருட்களையும் தங்கம் பெற்று வணிகஞ் செய்தார்கள்; ரோமாபுரி யிலிருந்து வாங்கி சீனத்துக்கு ஏற்றுமதியும் செய்தார்கள்; போன்ற குறிப்புகள் உள்ளன.  அகசுடசுப் பேரவையில் பாண்டிய நாட்டு தூதர் அமர்ந்தார் என்றும், அகசுடசுக்கு சேர நாட்டில் கோயில் கட்டப்பட்டது என்றும் குறிப்பிட்டார்கள். 

ரோமாபுரி வீரர்கள் தமிழ் மன்னர்களுக்கு மெய்க் காப்பாளர்களாகவும் விளங்கினர் என்றும் அவர்களுக்குத் தனி குடியிருப்பு இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.
 
இதில் வியக்கத்தக்க ஒற்றுமை யாதெனின் யவனர்கள், கிரேக்கர்கள், அராபியர்கள், அயல் நாட்டு வரலாற்று மூலகங்களாக தமிழ் நாட்டின் வரலாற்றை ,மக்களை , பண்பாட்டை பதிவு செய்துள்ளார்கள். தமிழ் நாட்டின் அகச் சான்றுகள் நீங்கலாக அயல் நாட்டு வரலாறு மூலகங்கள் நம் தமிழ் நாட்டு வரலாற்றினை உலகுக்குப் பறைசாற்றும். 

 காண்க : உறலி :
The Periplus of the Erythraean Sea  

 காண்க : உறலி :
V.A.Smith Early History of India 2nd edition Ch.XVI Sec.1 The Kingdoms of the South p.396 Ptolemy  

  காண்க : உறலி :
Periplus of the Erythræan sea: travel and trade in the Indian Ocean   
காண்க : உறலி :
Maritime Southeast Asia to 1500 By Lynda Shaffer page.2 para.1, 2 

திருவிசயப்  பேரரசு கி.பி. 6 - ஆம் நூற்றாண்டு :





கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ்க் கடலோடிகள் தென் கிழக்காசிய பேரரசான திருவிஜயப் பேரரசைப் பொருளாதார வலிவுடை நாடாக்கியதில் பெரும்பங்காற்றி மேலும் வளர்வதற்கு உதவி, மிக்க செல்வாக்குடனும், புகழுடனும் தமிழ் வணிகர்கள் இருந்தார்கள். மன்னர்களும் தமிழ்க் கடலோடிகள் தொடர்பை விரும்பி ஏற்றார்கள்.


அப்படி வாழ்ந்த அக்காலகட்டங்களில் நம் தமிழ்ப் பண்பாட்டினையும் மொழியையும் இந்த கடலோடிகளே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அடிக்கோள் இட்டார்கள். அந்நாட்டு மன்னர்களும் தமிழ் நாட்டு மன்னர்களுடன் தொடர்பும் கொண்டனர். உதவிகளும் நம்மிடம் கேட்டுப் பெற்றனர் .

கிழக்கு -தென் கிழக்காசிய நாடுகளில் சோழ மாமன்னனின் புலிக்கொடி :

 ஆயினும் ஒரு சிறு உறுத்தல் நம் தமிழ்க் கடலோடிகளிடம் ! சீன நாட்டுடன் நேரிடை வாணிகஞ் செய்ய விரும்பினார்கள். திரு விசய மன்னனோ சீன நாட்டு வாணிகம் தன் மூலம்தான் நடக்கவேண்டும் என வணிகக் கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் விதித்தான் ! அனுமதி மறுத்தான் அப்பேரரசன் !

நம் தமிழ்க் கடலோடிகளோ சோழப் பெருவேந்தன் இராசராசனிடம் சென்று முறையிட்டார்கள். சோழநாட்டு ஒற்றர்களோ திரு விசய நாட்டுக்குள் வணிக வேடம் பூண்டு நுழைந்து, ஒற்றறிந்து சோழநாட்டுக்  கடற்படை இராசேந்திர சோழன் தலைமையில் பல ஆயிரம் போர்கப்பல் களில் வந்து ஒரே நாளில் தாக்கி திரு விசய மன்னனைத் தோற்கடித்து நாட்டை வெற்றி கொண்டார்கள். 




தாய்லாந்து புத்தக் கோவிலில் வரையப்பட்ட ஓவியக் காட்சி : "சோழர்களின் - திரு விசாயப் பேரரசு மீது தாக்குதல் !"

பின்னர் நட்பு பாராட்டி மீண்டும் திருவிசய மன்னனிடமே ஆட்சியை ஒப்படைத்தான் .

நம் வணிகரும் விரும்பியவாறு சீனருடன் நேரடி வாணிகஞ் செய்தனர். பின்னர் ஒருசமயம் அரசியல் சூழல் கருதி திரு விசய மன்னன் சோழர் உதவி நாடி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டான்  என்பது வரலாறு.

இந்திய வரலாற்றிலே கடற்பேரரசு அமைத்தவன் மாமன்னன் இராச இராசனே !


 Refernce:
Quote :
"Rajendra overseas expedition against Srivijaya was a unique event in India's history and its otherwise peaceful relations with the states of Southeast Asia."

"Nilakanta Sastri suggests that the attack was probably caused by Srivijayan attempt to throw obstacles in the way of the Chola trade with the East, or more probably, a simple desire on the part of Rajendra to extend his digvijaya to the countries across the sea so well known to his subject at home, and therefore add luster to his crown.[48] Although Srivijaya mandala still survive and the Chola invasion was ultimately unsuccessful, it gravely weakened the Srivijayan hegemony."   - Unquote

தமிழ்க் கடலோடிகள் பரப்பிய தமிழர் பண்பாடு :
பின்னர் கோயில்களைக் கட்டியது யார் ? தமிழர் பண்பாட்டை பரப்பியது யார் எனில் புதிய கற்காலம் தொட்டே வாணிகம் செய்து வந்துள்ள தமிழ்க் கடலோடிகளே ! அவர்கள் தங்களுடன்,  கோயில்கட்டும் பெருந்தச்சர்கள், சிற்பிகள் என மரக்கலங்களில் அழைத்துச் சென்று தமிழ்ப் பண்பாட்டை பரப்பினார்கள் என்று பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலர் கூறுகிறார்.

பூசாங் பள்ளத்தாக்கு : கெடா மாநிலம், மலேசியா
இன்று பூசாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் பல்லவர் கால, சோழர் கால கட்டடடக் கலைச் சிறப்பை விளக்கி அகழ்வாதாரங்களையும், மேலும் பல புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்திருந்த மலையக அரசின் தொல்லியல் துறைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.


பெருமையுடன் மலேசிய அரசு "பட்டிப்பாலையில் காழகம் பற்றிய செய்தி !" என்று  கடார அருங் காட்சியகத்தில் .............



மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாழிகளும், மணிகளும் பல்லவர் மற்றும் சோழர் கால சிவன் , திருமால், நான்முகன் (பிரமன்), சக்தி, பிள்ளையார் முதலிய கடவுளர் சிலைகளும், கல்வெட்டுக்களும் கட்டடச் சிதைவுகளும் அருங்காட்சியகத்தில் உள்ளன. அருங்காட்சியகத்தை அகழ்வுகளுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். எனவே சுற்றிலும் அகழப்பெற்றுள்ள கட்டட அடித்தளங்கள் உள்ளன.

புசாங் அருங்காட்சியகத்தில் பிள்ளையார் :


                 
       
  மலையக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த புதையல்களான கோயில்களை ஒப்பிட்டுத் தமிழ்நாட்டின் கோயிலையும், தாய்லாந்து கோயிலையும், கம்போடிய அங்கோர்வாட் கோயிலையும், வியத்நாம் நாட்டுக் கோயிலையும், இந்தோனிசிய நாட்டின் ஜாவாவில் உள்ள கோயிலையும் படங்கள் எடுத்து அந்த அருங்காட்சியகத்தே வைத்துள்ளார்கள்.


ஜாவாவில் நம் கோயில்




























































கடாரம் , சாவகம்,  சுமத்ரா, கம்போடியா , வியத்னாம் . தாய்லாந்து ஆகிய இடங்களில் நம் கட்டடக்கலை,  பண்பாடு, தமிழ் மொழி , ஊர்களுக்குத் தமிழ்ப் பெயர்கள், பொன் என்று ஒரு மங்கையின் பெயர், சக்தி போன்ற பெயர்கள்  கம்போடியாவில் !

நம் பண்பாடு விளங்கும் இடங்களில் நம் தமிழ் பண்பாட்டுப் பாலம் அமைப்போம்.

பூசாங் அருங்காட்சியகம்:  நம்ம ஊர் கோயில் அமைப்பு :







தமிழரின் கோயில் கட்டடக் கலை, கோபுர அமைப்பு, இன்றும் நம் தமிழர் மட்டும் அறிந்த ஒன்றே இக் கட்டடக் கலை !




தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின் தனித்துவம் வாய்ந்த தன்மையை வரலாற்று ஆய்வாளர்களும், ஏன் இன்றும் கூட நம்மில் பலரும் அறிந்து வைத்துள்ள செய்தியே ஆகும்.


தெற்கே கன்னியாகுமரி தொடங்கி வடவேங்கடம்வரை உள்ள கோயில் கோபுர அமைப்பும், கட்டட அமைப்பும் அதற்கு வடக்கே உள்ள கோபுர அமைப்பும் தெளிவாக வேறுபடும் நம் தமிழரின் கைவண்ணமும் இவ்வுலகம் அறிந்த ஒன்றே!


கடாரம் அருங்காட்சியகம் மற்றும், தமிழர் கோயில் கட்டிய இடங்கட்கும் சென்று எடுத்த படங்கள்:

தொடர்பு  வலைத்தள முகவரி இங்கே காண்க:
http://picasaweb.google.com/108634393860469829875
 


இன்னும் ஒரு புதிய செய்தி பூசாங் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வரும் வழியில் சுங்கை பட்டானி என்னுமிடத்தில் ஆற்றங்கரையில் ஓர் அற்புதப் புதையல் கிடைத்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்ந்து வருகி றார்கள் .சுங்கை பட்டானி ; சுங்கை= ஆறு பட்டானி = உழவர் . நிலத்துள் புதையுண்ட கோயிலின் மேற்புற தோற்றம் வெளி வந்துள்ளது, சுவர்களின் பகுதிகளும் , செங்கற் குவியலும், கிடக்கின்றன .





 மறுக்கப்பட்ட வரலாற்று உண்மை :
அ . புவிசார்  அரசியலில் தமிழ்க் கடலோடிகளின் பெரும் பங்கு :
சோழப்பேரரசின்  வீழ்ச்சி , பாண்டியன் மறவர்மன் தொடங்கி பேரரசாக வளர்ந்த ஆட்சி வீழ்ந்து



   தலை நிமிர்ந்து சொல்லுங்கள் தமிழர்களே ! உலகிற்கு இவ்வுலகிற்கு !
















5 comments:

  1. நம் முன்னோர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தேடியலைந்த உங்களின் உழைப்பை பாராட்ட சொற்களில்லை.

    அந்நூல் இனிவரும் தலைமுறைகளுக்கும் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி..

    தமிழும் தமிழரும் எந்த நிலையில் வாழ்ந்தார்கள் என்பது தற்காலத் தலைமுறையினருக்குத் தெரியாமலேயே இருக்கிறது.

    இளையர்களைத் தமிழில் பழக்குவதும் வரலாற்றில் நனைப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையான ஒன்றாக உள்ளது...

    ReplyDelete
  3. Please remove word verification in your blog comment settings...

    It discourages readers from commenting.. thanks.

    :))

    ReplyDelete
  4. Thanks ! Word verification since removed! நன்றி ! அறிவன் அவர்களே ! சென்றடைதல் நம் நோக்கம் ! வருங்காலத் தலைமுறையினர் முன்னர் நம் வரலாற்றை வைப்பது நம் தமிழ்க் கடமை !

    ReplyDelete
  5. நான் கீழடியில் தமிழ் மரபு அறக்கட்டளை உதவியுடன் சென்று சுடுகற்களின் மாதிரிகள் எடுத்துவந்தேன். அதில் தங்கத்துகள்கள் கலந்து மின்னுகின்றன.கவிதைகணேசன்.கைப்பேசி 9245103471

    ReplyDelete